குறிப்பு: 200 ஆண்டுகளுப்பின் நீண்டகாலம் தெரியக்கூடிய பிரகாசமான வால்நட்சத்திரம் என்பது பத்திரிக்கைகளிள் மருவி வந்துள்ளது.
------------------------------------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ---------
200 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் ஐசான் வால் நட்சத்திரம்
திருப்பூர், செப். 25 - நவம்பரில் வானில் தெரிய இருக்கும் ஐசான் புதிய வால் நட்சத்திரத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மத்திய அரசின் விஞ்ஞான பிரசார் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு சார்பில் விஞ்ஞானிகள் பங்கேற்று வால் நட்சத்திரம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கமளித்தனர்.
கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி பார்த்தசாரதி கூறுகையில், ஐசான் என்ற புதிய வால் நட்சத்திரம் வரும் நவம்பரில் சூரிய குடும்பத்தில் நுழைகிறது. இதன் வயது சுமார் 460 கோடி எனவும், சூரியன் தோன்றிய போது இதுவும் தோன்றியிருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். மிகவும் பிரகாசமான இந்த நட்சத்திரம் 200 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நம் கண்களுக்கு தெரியவிருக்கிறது.
நவம்பர் 2 வது வாரத்தில் இந்த வால்நட்சத்திரம் வெறும் கண்ணில் நன்றாக தெரிய ஆரம்பிக்கும். அதிகாலை சூரியன் உதயம் ஆவதற்கு முன்பு இதை பார்க்கலாம். வெறும் கண்ணால் பார்ப்பதால் எந்த ஆபத்தும் ஏற்படாது. தொடர்ந்து வால் நட்சத்திரம் சூரிய குடும்பத்திற்குள் நுழைய முயற்சிக்கும் போது சூரியனை உரசி செல்வது போல் தோன்றும். அப்போது வால் நட்சத்திரம் சிதறக் கூடிய வாய்ப்பு உள்ளது. சிதறாமல் நுழைந்து விட்டால் இந்த நூற்றாண்டில் பிரகாசமாக தெரியும் வால் நட்சத்திரம் இதுவாகத்தான் இருக்கும். இவ்வாறு பார்த்தசாரதி தெரிவித்தார்.
Source: Dinaboomi
