வானில் தோன்றும் அதிசயம்: பொதுமக்கள் காண வாய்ப்பு

வானில் தோன்றும் அதிசயம்: பொதுமக்கள் காண வாய்ப்பு

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2013,02:38 IST

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், வால் நட்சத்திரம் பற்றிய கருத்தாளர்கள் பயிற்சி முகாமில், பங்கேற்று பயன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏழரை லட்சம் கோடி கி.மீ தொலைவில் இருந்து, ஐசான் வால் நட்சத்திரம் வேகமாக வந்து கொண்டிருக்கிறது.இது நவம்பர், 28ம் தேதி, சூரியனுக்கு மிக நெருக்கமாக வர இருக்கிறது. பூமியில் இருந்து வெறும் கண்ணால், நவம்பர் ஆறாம் தேதி முதல், 23ம் தேதி வரை பிரகாசமாக காணலாம்.வால் நட்சத்திரத்தை காண்பது, காண கிடைக்காத வான் அதிசயம். இதனை கண்டு களிக்கவும், வானவியல் பற்றியும், வால் நட்சத்திரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள், ஐசானை காணும் வகையிலும், மாவட்ட அளவில் பரவலாக கொண்டு செல்லும் வகையில், அதிக கருத்தாளர்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.கருத்தாளர்கள் பயிற்சி முகாம், வரும், 26ம் தேதி மாலை, 5 மணியளவில் நடக்க உள்ளது.பயிற்சி பெற ஆர்வம் உள்ளவர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் - 94438 14984, மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், 9487603090 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, பதிவு செய்து கொள்ளலாம்.

நன்றி: தினமலர்