முதல் பக்கம்



 
மிழ்நாடு அறிவியல் இயக்கம்
ஐசான் வால்நட்சத்திரம் காண்போம்! பிரச்சாரம்.
           



         வானவியல் என்பது அனைவருக்கும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியது. இதற்குக் காரணம் வானம் அனைவருக்கும் ஒரு பொதுவான ஆராய்ச்சிக் கூடமாக விளங்குவதேயாகும். எனவேதான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவரும் இரவில் வானத்தை நோக்குவது என்பது மனிதன் தோன்றிய கலத்தில் இருந்து பிடித்தமான செயலாக இருந்து வருகிறது. இதுவே வானவியல் அறிவியல்களின் தாயாக அமையக் காரணமாகவும் விளங்கியது.
              குழந்தைகள் மட்டும் அல்லாது அனைவருமே அறிவியலைப் படிப்பதை விட நேரடியாகச் செய்து பார்ப்பதின் மூலம் எளிதில் கற்றுக் கொள்கிறோம். மேலும் ஆர்வமும் அதிகமாகிறது. அறிவியல் ஆர்வத்தை மக்களிடம் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறையின் Vigyan Prasar மற்றும் NCSTC-network ஆகியவை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற நம்நாடு முழுவதும் உள்ள பல தன்னார்வ அறிவியல் இயக்கங்களுடன் சேர்ந்து பல பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த சர்வதேச வனவியல் ஆண்டு 2009, வளைய சூரியகிரகணம் -2010, வெள்ளி இடைநகர்தல் 2012 (Transition of Venus) போன்றவற்றை மக்களிடத்தில் ஒரு இயக்கமாகக் கொண்டு சென்றதை உதாரணமாகக் கூறலாம்.
         தற்போது சூரியனை நெருங்கிவரும் ஐசான் (C/2012 ISON) என்ற வால்நட்சத்திரம் அறிவியலை மக்களிடத்தே பரப்புவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வால்நட்சத்திரம் நவம்பர் முதல் இரண்டாம் வாரத்திலிருந்து தெரிய ஆரம்பிக்கிறது. நவம்பர் 28ம் தேதி சூரியனுக்கு வெகுஅருகில் சென்று பின் டிசம்பர் முதல் மீண்டும் தெரியும். இந்த நூற்றாண்டின் மிக பிரகாசமன வால் நட்சத்திரமாய் அமையலாம் எனக் கருதப்படுகின்றது. இந்த வான் நிகழ்வினை அனைத்து பள்ளிக் குழந்தைகளும் குறிப்பாக கிராமப்புறக் குழந்தைகளுக்கு வானவியலின் ஆர்வத்தை ஏற்படுத்துவற்கான ஓர் வாய்ப்பாகக் கருதலாம்.
         இதுவரை வால் நட்சத்திரத்தினை கண்டுபிடித்த ஒரே ஒரு இந்தியர் இந்திய நவீன வானவியலின் தந்தையான வைணு பப்பு என்ற ஒரே ஒருவர்தான்; அதுவும் அமெரிக்காவில் படிக்கும்போது. இந்திய மண்ணிலிருந்து இதுவரை யாரும் புதிய வால்நட்சத்திரங்களை கண்டுபிடித்த்து இல்லை. எனவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடத்தே இதுபற்றிய விழிப்புணர்வையும் ஆராய்ச்சி மனப்பான்மையை தூண்டுவதும் இந்த ”ஐசான் காண்போம்’ பிரச்சாரத்தின் ஒரு நோக்கம் ஆகும்.