"ஐசான்' வால் நட்சத்திரம் தெரியுமா?
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2013,22:22 IST
திருப்பூர்:வரும் அக்., நவ., மாதங்களில் "ஐசான்' என்ற வால் நட்சத்திரம், சூரிய குடும்பத்தில் புதிதாக நுழைகிறது. அதன் வயது 460 கோடி எனவும், சூரியன் தோன்றியபோது, இது தோன்றியதாகவும், விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நட்சத்திரம் மிக பிரகாசமானது; 200 ஆண்டுகளுக்குபின், பிரகாசமாக இந்நட்சத்திரம் பூமியில் தெரிய உள்ளது. இது, ஒரு அரிய வானியல் நிகழ்வு. மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு ஆகியவை, "ஐசான்' நிகழ்வு குறித்து இந்தியா முழுவதும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.தமிழகத்தில் "ஐசான்' பற்றிய விழிப்புணர்வு, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் வரும் 23, 24ம் தேதிகளில் நடக்கிறது. பெங்களூரு விஞ்ஞானி முத்துமாரியப்பன், சூரிய குடும்பம் தோற்றம் பற்றி பேசுகிறார். கல்பாக்கம் அணு மின்நிலையத்தை சேர்ந்த பார்த்தசாரதி, வால் நட்சத்திரத்தின் வரலாறு குறித்து பேசுகிறார்.வரும் 23ம் தேதி இரவு 7.00 முதல் 10.00 மணி வரை, 24ம் தேதி காலை 4.30 முதல் 6.00 மணி வரை, டெலஸ்கோப் மூலமாக, வான் நோக்கல், வால் நட்சத்திரம் (ஐசான்) போன்றவற்றை, ஜெயமுருகன், உமாசங்கர் ஆகியோர் விளக்குகின்றனர்.
நன்றி: தினமலர்