23 September 2013 02:22 AM IST
ஐசான் என்ற வால்நட்சத்திரம் குறித்த
பயிற்சிப்பட்டறை திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள்
மேல்நிலைப்பள்ளியில் திங்கள் செவ்வாய்க்கிழமை இரு தினங்கள் நடைபெற உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆ.ஈஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐசான் என்ற வால் நட்சத்திரம் சூரிய குடும்பத்திற்குள் புதியதாக நுழைய இருக்கிறது. இதனுடைய வயது சுமார் 460 கோடி எனவும், சூரியன் தோன்றியபோது இதுவும் தோன்றியிருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நட்சத்திரம் மிகுந்த பிரகாசமானது. இப்படி மிகவும் பிரகாசமான வால் நட்சத்திரம் 200 ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான் பூமியில் தெரிய இருக்கிறது.
இது ஒரு அறிய வானியல் நிகழ்வாகும். மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு இணைந்து ஐசான் நிகழ்வை மக்கள் மத்தியில் கொண்டுசென்று அறிவியல் விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
தமிழகத்தில் ஐசான் வால்நட்சத்திரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பள்ளியில் செப்டம்பர் 23, 24-ஆம் தேதிகளில் பயிற்சிப்பட்டறை நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 3 ஆசிரியர்கள் வீதம் 90 பேர், ஜெய்வாபாய் பள்ளி மாணவிகள் 25 பேர், கோவை தேஜா சக்தி கல்லூரி மாணவிகள் 25 பேர் என 150 பேர் பங்கேற்கின்றனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஊட்டியில் உள்ள ரேடியோ வானவியல் மையத்தின் தலைவர் பேராசிரியர் பி.கே.தினகரன் துவக்கி வைக்கிறார். இதையொட்டி, ஜெய்வாபாய் பள்ளியில் கலிலியோ வானவியல் மன்றத்தை இந்திய வான் இயற்பியல் நிறுவன விஞ்ஞானி(பெங்களூரு) முத்துமாரியப்பன் தொடங்கி வைத்து, சூரிய குடும்பத்தின் தோற்றம் பற்றி சிறப்புரையாற்றுகிறார்.
வால்நட்சத்திரத்தின் வரலாறு குறித்து கல்பாக்கம் அணுமின் நிலையம் எஸ்.பார்த்தசாரதி, வானவியலும் சோதிடமும் குறித்து பேராசிரியர் சோ.மோகனா, ஐசான் வால்நட்சத்திரம் குறித்து சென்னை சி.ராமலிங்கம், மதுரை எல்.நாராயணசாமி சூரிய குடும்பம் குறித்து ஒளி, ஒலி காட்சி மூலமாக விளக்க உள்ளனர்.
திங்கள்கிழமை இரவு 7 முதல் 10 மணி வரையிலும் 24-ஆம் தேதி அதிகாலை 4.30 முதல் 6 மணி வரையிலும் டெலஸ் கோப் மூலமாக வான் நோக்கல், வால் நட்சத்திரம்(ஐசான்) குறித்து விளக்கப்பட உள்ளது. மாவட்ட அறிவியல் இயக்க நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Source: Dinamaniஇது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆ.ஈஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: