நம் சூரியகுடும்பம் எப்படி தோன்றியது? - Poster 2

விளக்கப்படம்- 2 நம் சூரியகுடும்பம் எப்படி தோன்றியது?

நமது சூரிய குடும்பத்தின் வயது 460 கோடி வருடங்கள் ஆகிறது. இது அணுமேகங்களால் உருவானது என்று நம்பப்படுகிறது. இந்த அணு மேகங்கள் மத்தியில் ஈர்ப்பு விசை அதிகரித்து மையப் பகுதியை நோக்கி அமிழ்ந்து சிறியதாகவும், வெப்பமுடையதாகவும் மாறி சுற்ற ஆரம்பித்தன. இந்த நிகழ்வுப் போக்கில் மேலும் அதிக அணு மேகங்கள் சூரியனின் மையத்தில் சேர ஆரம்பித்தன. சூரியனின விளிம்புப் பகுதியில் உள்ள  பொருட்கள் கிரகங்களாகவும், உபகிரகங்களாகவும், பாறைப்பொருட்களாகவும், வால் நட்சத்திரங்களாகவும் மாறியிருக்கின்றன.
சூரிய அணுமேகத் தொகுதியின் நடுவில் மேலும் அதிகமான பொருட்;கள் வந்து சேர்ந்து மையத்தின் அழுத்தத்தை அதிகரிக்க நடுவில் அளப்பபரிய வெப்பம் அணுப்பிணைவுகளால் உருவாகி சூரியன் தோன்றியுது. இந்த நிகழ்வின் போது சூரிய மையத்தில் மேலும் பொருட்கள் விழுந்து கொண்டிருந்த காரணத்தால் பொருட்கள் மையத்திலிருந்து விலகி சுற்ற ஆரம்பித்தன. அவைகள் ஒன்றோடொன்று மோதவும் செய்தன. சில பொருட்களின் மின் சக்தி (நுடநஉவசழளவயவiஉ) காரணமாக ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு தூசிப் பொருட்களாக வளர ஆரம்பித்தன. ......................................

மேலும் அறிந்து கொள்ள.....

download: ISON ஐசான் Tamil-Poster02_FormationOfSolarSystem.jpg (1.7MB)