வால்நட்சத்திரம் என்றால் என்ன? அது எங்கிருந்து வருகிறது? - Poster 3

விளக்கப்படம் 3 - வால்நட்சத்திரம் என்றால் என்ன? அது எங்கிருந்து வருகிறது?

வால்நட்சத்திரங்கள் என்பது சுமார் 100 மீட்டரிலிருந்து, ஒரு சில கி.மீ தொலைவுக்கு இருக்கும் பனித்தூசுக்களாலான பாறைகள் ஆகும். இவை சூரியனை மிக நீண்ட நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகின்றன. இந்த பனிக்கட்டி என்பது உறைந்த நிலையிலுள்ள நீர், அம்மோனியா, கரியமில வாயு, போன்ற பெருட்களால் ஆனது.
ஊழஅநவ என்ற சொல்லுக்கு, நீண்ட முடியுடைய என்ற பொருளாகும். வால்நட்சத்திரத்தின் மையப்பகுதி, ஒரு சில கி.மீ தான் என்றாலும் அது சூரியனுக்கு அருகில் வரும்போது, அதன் வால் பல கோடிக்கணக்கான கி.மீ நீளமுடையதாய் இருக்கும்.
ஒரு வால்நட்சத்திரம் சூரியனுக்கு வெகுதொலைவில் இருக்கும்போது, மங்கலாக இருக்குமாதாலால் அதைக் கண்டுபிடிப்பது கடினம். வால்நட்சத்திரம் சூரியனை நெருங்கும்போது, அதற்கு நீண்ட வால் வளர்கிறது. இவையே வால்நட்சத்திரங்களை நாம் அடையாளம் காணுவதற்கும் கண்ணைக்கவரும் வண்ணம் இருப்பதற்கும் காரணம் ஆகும். வால்நட்சத்திரம் சூரியனுக்கு அருகில் நெருங்கும்போது அதிலுள்ள பனிக்கட்டி நிலையிலுள்ள வாயுக்கள் சூரிய ஒளியால் ஆவியாகி, தூசுடன் சேர்ந்து அதன் பின்னால் நீண்ட வாலாக விசிறியடிக்கப்படுகின்றன. இந்த வாயுக்கள் இப்படி வெளியே வீசி எறியப்படும் முன்னால் அவை உட்கருவைச் சுற்றி கோமா என்கிற தற்காலிக வளிமண்டலத்தை உண்டாக்குகின்றன...........

மேலும் அறிந்துகொள்ள...

Download : ISON ஐசான் Tamil-Poster03_WhatIsComet.jpg (1.4MB)