வால் நட்சத்திரத்தின் வகைகள் - Poster 7

விளக்கப்படம் 7 - வால் நட்சத்திரத்தின் வகைகள்

குறைந்த சுற்றுக்காலமுடையவை
இவ்வகை வால்நட்சத்திரங்கள் 200 வருடங்களுக்குள் சூரியனை ஒருமுறையேனும் சுற்றிவருபவை. உதாரணம் ஹாலி வால்நட்சத்திரம். இவை நெப்டியூனிற்கு அப்பால் இருக்கும் குயிப்பர் பட்டையிலிருந்து வருகின்றன. இவற்றின் சுற்றுப்பாதை மிகவும் நீள்வட்டம் கிடையாது. இவை, குறுங்கோள்கள் ( அஸ்டராய்டுகள்) போன்றே, சூரியமண்டல தோற்றதின் போது கோள்களாக மாறாத எஞ்சிய பகுதிகள்.
நீண்ட சுற்றுக்காலம் உடையவை
இவ்வகை வால்நட்சத்திரங்களுக்கு சூரியனை ஒருமுறையேனும் சுற்றிவர 200 வருடங்களுக்கு மேல் ஆகும் .இவற்றின் சுற்றுப்பாதை மிகவும் நீள்வட்டமாக இருக்கும். உண்மையில், சில வால்நட்சத்திரங்களின் பாதை அது மீண்டும் திரும்பி வராதவாறு பரவளையமாகவோ அல்லது அதிபரவளையமாகவோ இருக்கின்றது. இவை சூரியனிலிருந்து 1000 வானவியல் அலகு (யுரு) தூரத்தில்     இருக்கும்   ஊர்ட் மேகத்திலிருந்து வருகின்றன.   ஏதேனும் நட்சத்திரம் அருகில் கடந்து செல்லும்போது, அதன் ஈர்ப்பு விசையினால் பாதிக்கப்பட்டு சூரிய மண்டலத்தின் உட்புறமாக தள்ளப்படுகின்றது.
1 வானவியல் அலகு (யுரு) ஸ்ரீ       பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு, 15 கோடி கி.மீ.  
சூரியனை உரசிச் செல்லும்  வால்நட்சத்திரம்
சில வால்நட்சத்திரங்கள் தன் மிக நீண்ட நீள்வட்டபாதையில் செல்கையில் சில நேரங்களில் சூரியனை வெறும் சில ஆயிரம் கி.மீ. தொலைவில் கடக்க நேரிடலாம்.! அவ்வாறு சூரியனுக்கு அருகில் செல்லும்போது அவற்றில் மிகச்சில முழுவதும் ஆவியாகிவிடுகின்றன அல்லது சிறு சிறு துண்டுகளாகிவிடுகின்றன அல்லது சூரியனுள் விழுந்துவுகின்றன. ஐசானும் இப்படிப்பட்ட ஒரு சூரியனை உரசிச் செல்லும் வால்நட்சத்திரம் ஆகும்.

மேலும் அறிந்து கொள்ள .....


Download : ISON ஐசான் Tamil-Poster06_OrbitsOfComets.jpg ( 2MB)