வால் நட்சத்திரங்களின் பாதைகள்- Poster 6

விளக்கப்படம் 6 - வால் நட்சத்திரங்களின் பாதைகள்

வால் நட்சத்திரங்கள் என்னவென்றே தெரியாத காரணத்தினாலும், எங்கிருந்து வருகின்றன, எங்கு செல்கின்றன என்பதை அறியாததாலும் பல நூற்றாண்டுகளாக மக்கள் வால் நட்சத்திரம் குறித்த பயத்தில் இருந்தனர். வானத்தில் அவைகள் சுற்றி வரும் பாதை மற்ற கோள்கள் சுற்றிவரும் பாதைபோல் இல்லாமல் வேறுபட்டு இருந்தன. வால்நட்சத்திரங்கள் நேர் கோட்டில் பயணித்ததாகவும் கணிக்கப்பட்டது.

1687ல் ஐசக் நியூட்டன், வால் நட்சத்திரங்களும் மற்ற கோள்களைப் போலவே ஈர்ப்பு விதிகளின் படி சூரியனைச் சுற்றி வருகின்றன என நிரூபித்தார். இதன் அடிப்படையில் எட்மன்ட் ஹாலி அவர் கண்டுபிடித்த வால் நட்சத்திரம் சூரியனை குறிப்பிட்ட காலத்தில் சுற்றி வருவதை கணக்கிட்டுச் சொன்னார். ஹாலி வால்நட்சத்திரம் என்று தற்போது அழைக்கப்படும் இதனை பலமுறை மக்கள் பார்த்துள்ளனர்.
வால் நட்சத்திரங்களின் சுற்றுப்பாதை  மற்ற சூரிய மண்டலப் பொருட்களைப் போலவே ஒரு கூம்பின் வெட்டுப் பகுதியாகும். அவை நீள் வட்டமாகவோ பரவளையமாகவோ அதி பரவளையமாகவோ இருக்கலாம்.

வால் நட்சத்திரங்களின் சுற்றுப்பாதை மிக நீண்ட நீள்வட்டத்தில் இருப்பதால் அவை சூரியனுக்கு அப்பால் பலநூறு ஆயிரம் ஆண்டுகள் தங்கள் காலத்தினை கழிக்கின்றன. அவைகள் தங்களின் மிகச் சிறிய காலத்தில் மட்டுமே சூரியனை நெருங்குகின்றன. சூரியனை மிக அருகே நெருங்குவதை அதன் சூரிய அருகாமை (perihelion) என்று அழைக்கப்படுகிறது.

 மேலும் அறிந்துகொள்ள.....

Download : ISON ஐசான் Tamil-Poster06_OrbitsOfComets.jpg (2Mb)