"ஹாலி" வால் நட்சத்திரம் - Poster 9

விளக்கப்படம் - 9 "ஹாலி" வால் நட்சத்திரம்

வால்நட்சத்திரங்களில்  மிகவும்  புகழ்பெற்றது, "ஹாலி" வால்நட்சத்திரம் ஆகும். மேலும், இயற்பியலின் வளர்ச்சிக்கும், வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பங்கினை, இவ் வால்நட்சத்திரம் ஆற்றியுள்ளது.
பண்டைய காலங்களின், பல்வேறு தருணங்களில், சீனர்கள், பாபிலோனியர்கள், மற்றும் ஐரோப்பியர்கள், இவ் வால்நட்சத்திரத்தைக் கண்டதற்கான குறிப்புகள், வரலாற்றுப் பதிவுகளின் ஆய்வுகளில் கிடைத்துள்ளன.

அவற்றுள், கி.மு.240-ல் சீன மொழியில் எழுதப்பட்டஷைஜி (Shiji ) எனப்படும், ஹாலி வால்நட்சத்திரம் குறித்த கையெழுத்துப் பிரதி, இன்றளவும், மிக முக்கிய தொல் ஆதாரமாய்த் திகழ்கிறது.                                                                                                                  குறுகிய கால இடைவெளியில், சூரியனை வலம் வரும் வால்நட்சத்திரங்களுள், ஹாலி வால்நட்சத்திரமும் ஒன்றாகும். இதன் நெடிய நீள் வட்ட சுற்றுப்பாதை, வெள்ளி மற்றும் புளூட்டோவின் சுற்றுவட்டப் பாதைகட்கு இடையில், நீண்டு அமைந்துள்ளது.....

மேலும் அறிந்து கொள்ள