வால்நட்சத்திரத்திற்கு ஒரு உலா - Poster 10

விளக்கப்படம் 10 - வால்நட்சத்திரத்திற்கு ஒரு உலா

கி.பி.1985-ம் ஆண்டில்,சர்வதேச வால்நட்சத்திர ஆராய்ச்சி 
விண்கலமானது(INTERNATIONAL COMETARY EXPLORER), 
ஜியோகோபினி-ஸின்னர்(Comet GIOCOBINI-ZINNER)எனும்  வால்நட்சத்திரத்திற்கு அருகில் பறந்து, அதை ஆராய்ந்து, வால்நட்சத்திரங்கள் யாவும் "அழுக்கான பனிப்பந்துகளே" (Dirty Snowballs)என்ற கொள்கையை உறுதிசெய்தது.


கி.பி. 1986-ல் SUISEI, SAKIGAKE, VEGA-1, VEGA-2 
மற்றும் GIOTTO ஆகிய விண்கலங்கள் ஹாலி வால்நட்சத்திரத்திற்கு அருகில் பறந்து சென்றன. ஹாலி வால்நட்சத்திரத்தின் அடர்த்தி, உருவ அமைப்பு, அதன் அளவு, அதிலிருந்து வெளியேற்றப்படும் வாயு மற்றும் தூசுப் பொருட்களின் இயைபு மற்றும்  அவற்றின் பண்பு ஆகியவற்றை, அவ்விண்கலன்கள் அளவிட்டன. 

மேலும் அறிந்துகொள்ள...