வால்நட்சத்திரத்தின் உள் கட்டமைப்பு (anatomy) - Poster -4

விளக்கப்படம் 4 - வால்நட்சத்திரத்தின் உள் கட்டமைப்பு (anatomy)

வால்நட்சத்திரங்கள் சூரியனிலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் பொழுது பனிப்பாறையாக சேர்ந்து இருக்கின்றன, அப்போது அவற்றை ஆராய்வது கடினம். இருப்பினும், சூரியனிலிருந்து 50 கோடி கி.மீ தொலைவுக்குள் வந்துவிட்டால் அவைகளின் தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் உண்டாகின்றன. அப்போது நாம் அதன் உட்கரு, கோமா மற்றும் இரண்டு விதமான வால்கள் ஆகியவற்றைத் தெளிவாகக் காணலாம்.
சூரிய காற்றால் சூரியனிலிருந்து வெளிப்படும் துகள்கள் கோமாவில் இருந்து வாயுக்களும் தூசுகளும் வெளிதள்ளளப்பட்டு அயனிவால் (சூரியனின் எதிர் திசையில் நீண்டு இருக்கும்) மற்றும் தூசுவால் (வால்நட்சத்திரப்பாதையில் சூரியனுக்கு எதிராக வளைந்து காணப்படும்) ஆகியவற்றைத் தோற்றுவிக்கின்றன.
உட்கருவாக இருக்கும் பனிப்பாறையின் மேல்பகுதி சூரியஒளியால் ஆவியாகி உட்கருவைச்சுற்றி ஒரு வளிமண்டலத்தை உருவாக்கிவிடும். இதுவே கோமா (தலை) எனப்படும். சில ஆயிரம் கி.மீ அளவுள்ள தலைப்பகுதியானது வால்நட்சத்திரம் சூரியனை நெருங்க நெருங்க பெரிதாகின்றது. .............
மேலும் அறிந்துகொள்ள...

Download : ISON ஐசான் Tamil-Poster04_CometAnatomy.jpg (1.8 MB)