வால் நட்சத்திரத்திற்கு ஏன் வால்கள் இருக்கின்றன? - Posters 5

விளக்கப்படம் 5 - வால் நட்சத்திரத்திற்கு ஏன் வால்கள் இருக்கின்றன?  

சூரியனிலிருந்து ஆற்றல் மிக்க துகள்கள் இடைவிடாமல் சூரியக்காற்றாக, சூரிய மண்டலம் முழுவதும் வெளியேறிக் கொண்டு இருக்கின்றன. இந்த சூரிய காற்று தான் வால்நட்சத்திரத்தின் வாலை மிக நீளமாக்கி சூரியனின் எதிர் திசையில் தள்ளுகின்றது. பெரும்பாலான வால்நட்சத்திரத்திற்கு இரண்டு வால்கள் இருக்கும். ஒன்று நீலநிற அயனிவால் (Ion tail) மற்றொன்று மஞ்சள்நிற தூசு வால் (Dust Tail)
சில வால் நட்சத்திரங்களுக்கு எதிர் வால்களும்  இருப்பது உண்டு. அதாவது, இதற்கு முன்னதாக வால் நட்சத்திரப் பாதை உள்ள தளத்தில் பரவியுள்ள அதன் துகள்கள், சூரிய ஒளியை எதிரொளிப்பதால், வால் நட்சத்திரத்தின் முன்பக்கத்தில் ஒரு வால் இருப்பது போல் தோன்றும்.
வால் நட்சத்திரம் என்பவை 'தூசு கலந்த பனிப்பந்துகள்' அவை உறைந்த பனிக்கட்டிகள் (நீர், Co, Co2, NH3 & CH4 வற்றால் ஆன) மற்றும் பாறைகளால் ஆனவை.
வால்நட்சத்திரம், சூரியனை (3-4 வானியல் அலகு தூரத்தில்) நெருங்கிவரும் பொழுது சூரிய ஒளி இந்த பனிக்கட்டிகளை தங்கமாகச் செய்வதால், அவை நேரடியாக ஆவியாகிவிடும். இந்த வாயுக்களே வால்நட்சத்திரத்தின் வளிமண்டலமான அதன் தலையை (coma ) உருவாக்குகின்றது.............

மேலும் அறிந்து கொள்ள....

Download : ISON ஐசான் tamil--Poster05_CometTails.jpg (3MB)