வால்நட்சத்திரம் ஐசான் Comet C/2012 S1 ( ISON ) - Poster -18

விளக்கப்படம் - 18 வால்நட்சத்திரம் ஐசான் Comet C/2012 S1( ISON )


திரும்பவும் 2013ல் நாம் தூரத்தில் உள்ள ஊர்ட் மேகத்திலிருந்த ஒரு விருந்தினரை, ஐசான் வால் நட்சத்திரத்தைப் பெற்றிருக்கிறோம். இது  செப்டம்பர் 2012 ல் நோவோச்சோனோ மற்றும் நெவ்ஸ்கி ஆகிய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டு சர்வதேச அறிவியல் கூட்டமைப்பாகிய ஒளி ஊடகக் கூட்டமைப்பின் பெயரால் அழைக்கப்படுகிறது. அலுவல் ரீதியாக இதை சி/2012,எஸ் 1 ஐசான் என்று அழைக்கின்றனர்.இது வெகுவிரைவில் ஒரு அபூர்வ வால் நட்சத்திரமாக இருக்கப்போகிறது என்று தோன்றுகிறது..


வால் நட்சத்திரம் ஐசான் மிகவும் அழகானதும், ஒளிமிக்கதும், பகலிலும் தெரியக்கூடிய வால் நட்சத்திரமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் வால் நட்சத்திரங்களை, இப்படித்தான் இருக்குமென்று நம்பகமாகச் சொல்லமுடியாது.இந்த வால் நட்சத்திரத்தில் நாம் நினைத்ததை விட மிகக் குறைவான வாயுக்கள் இருக்கலாம்.மேலும் அது சூரியனை மிக அருகில் நெருங்குவதால் சிறு துண்டுகளாக உடைவதற்கும் வாய்ப்பு உள்ளது. நாம் ஐசானைப் பற்றி அது எவ்வாறு இருக்கும் என்பதைக் காத்திருந்து பார்த்த பிறகே சொல்ல முடியும்.ஐந்து கி.மீ அளவு உருவம் கொண்ட நீள்வட்டப் பாதையைக் கொண்ட இந்த வால் நட்சத்திரம் ஊர்ட் மேகத்திலிருந்து முதல் முறையாக  வருகிறது. அப்படியானால் அதன் உள்ளடக்கம் நம்முடைய சூரிய குடும்பத்தின் வாயு மேகங்களின் நிலைமைகளைப் பிரதிபலிக்கும்.இந்த வால்நட்சத்திரத்தைப்  பார்க்க எங்களோடு வாருங்கள். இது ஒரு அருமையான காட்சியாக இருக்கும் என்று நம்புகிறோம்...................................

மேலும் அறிந்துகொள்ள...