பூமியில் நீரை வார்த்தவை வால்நட்சத்திரங்களா..? -Poster 11

விளக்கப்படம் 11 - பூமியில் நீரை வார்த்தவை வால்நட்சத்திரங்களா..?

புழுதிப்புயல் வீசும்... பாலை செவ்வாய்...அமில மழை பொழியும்... அக்கினி வெள்ளி....இவற்றினின்று...பல்வேறு விதங்களில் வேறுபட்டது - முற்றிலும் மாறுபட்டது-நமது  பூமி !
அவற்றுள் ஒன்று... ஏராளமாய் நிறைந்திருக்கும்...நீராதாரம்....எங்கிருந்து இவ்வளவு நீர் ?.....பூமிக்கு வந்திருக்கும் என்பது.... நாம் இதுவரைக்கும்  முழுமையாய்...அறிந்திடாத  ஓர் புதிர்..!
ஆதியில் புவியை ஆக்கியப் பொருளிலிருந்தோ....அல்லது,பின்னாளில் தோன்றிய வேதி வினைகளிலிருந்தோ...அல்லது, புற வெளியிலிருந்து பெய்திட்ட பெருமழையிலிருந்தோ....

இப்புவிக்கு நீரானது வந்திருக்கலாம்.

கர்ராடு ( Comet GARRADD ) வால்நட்சத்திரத்தில்  கண்டறியப்பட்ட  நீர் மூலக்கூறுகள் சூரியக் குடும்பம் உருவாகிய‌ தருணத்தில்...ஏராளமான‌ வால்நட்சத்திரங்கள்..எல்லா இடங்களிலும் மொய்த்துக்கொண்டிருந்தன....அவைகளுள்...பெரும் நீர் சுமந்த வால்நட்சத்திரங்கள்...புவிக்கருகில் வந்தபோது, ஈர்ப்புவிசையால் உள்ளிழுக்கப்பட்டு விழுந்ததால்...புவியில் நீர் நிறைந்து...இன்றிருக்கும் பெருங்கடல்களும், சமுத்திரங்களும்  தோன்றியிருக்கலாம்.

மேலும் அறிந்துகொள்ள....