வால்மீன்கள் உயிர்களுக்கு பேராபத்தை உண்டாக்கக்கூடியவையா ? - Poster 12

விளக்கப்படம் - 12 வால்மீன்கள் உயிர்களுக்கு  பேராபத்தை உண்டாக்கக்கூடியவையா ?
இலட்சக்கணக்கான விண்கற்களும் வான்மீன்களும் நமது சூரியக் குடும்பத்தில் சூரியனைச் சுற்றிவருகின்றன. அவற்றில் ஒன்று ஏதேனும் ஒரு கோளின் அருகே கடக்கும்போது ஈர்ப்பு விசையானது அதன் சுற்றுப் பாதையை மாற்றிவிடக்கூடும். அது அந்தக கோளின் மீது மிகுந்த வேகத்துடன் மோதவும் கூடும்.  இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மோதல்களால் உண்டான அத்தகைய  மிகப்பெரிய பள்ளங்கள் பூமியின்மீதும் உள்ளன.  ( எ.கா- 1.மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள லோனார் ; 2.மெக்சிகோவிலுள்ள யுகான்டன்  போன்றவை) .  இதுபோன்ற மோதல்களில்,  10 கி.மீ அளவுள்ள விண்கல் ஒன்றின் மோதல் விளைவே , அநேகமாக 650 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் டைனோசர்களின் அழிவுக்குக் காரணமானதாகக்  கருதப்படுகிறது.
     பூமியின் அருகாமைப் பொருட்கள் ( என்.இ.ஓஸ்)  என்பவை, வால்மீன்களும் விண்கற்களுமாகும்.
அவற்றின் அருகிலுள்ள பிற கோள்களின் ஈர்ப்பு விசையால் அவை,பெறக்கூடிய உந்து சக்தியால் ஒரு சுற்றுப் பாதையில் சுற்றத் துவங்குதலே, அவை, பூமியின் அண்மைப் பகுதியில் நுழையக் காரணம் ஆகும்.  ஆபத்தை உண்டாக்கும் ஆற்றங் பெற்ற ஏதேனும் இவ்வகைப் பொருளை நாம் கண்டறிந்தால்,  அதனை நோக்கி விண்ஊர்திகளைச் செலுத்துவதன் மூலம் அவை செல்லும் திசையினைத் திருப்பிவிடவும் முயற்சிக்க இயலும்.
        ஒரு  மிகப்பெரிய வால்மீன் பூமியை நோக்கி வந்துகொண்டிருந்தால், அதுவும் அது வியாழன் அருகில் கண்டுபிடிக்கப்பட்டால், அது நமக்கு ஓராண்டுக்கான எச்சரிக்கையாக  இருக்கும்! தற்போதைய காலகட்டங்களில், பூமியின் மீதான அத்தகைய மோதல்கள் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அது நமது பூமியின் பெரும்பாலான உயிர்களை அழித்துவிடக்கூடும்.............

மேலும் அறிந்து கொள்ள.. 

Download : ISON ஐசான் Tamil-Poster12_CometThreatToLife.jpg (2.6MB)