ஒரு வால்மீன் வியாழன் கோளுடன் மோதுகிறது - Poster 13

விளக்கப்படம் 13 - ஒரு வால்மீன் வியாழன் கோளுடன் மோதுகிறது


சூரிய மண்டத்தின்  பெரும் பகுதி,  பெரும்பாலும் வெற்றுவெளியாக இருந்தபோதிலும் அது பல பாறைகள்,  வால்மீன்கள் மற்றும் கோள்களால் நிறைக்கப்பட்டுள்ளது.  சூரியனைச் சுற்றிவரும்போது இவற்றில் சில ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளக்கூடும். மற்றவை, மிகப்பெரிய கோள்களுக்கு அருகில் வரும்போது அந்தக்கோளின் ஈர்ப்பு விசையால் தங்கள் சுற்றுப்பாதையின் திசையை அதீதமாக மாற்றிக்கொள்ளும்.

     இத்தகைய வால்மீன்களில் ஒன்றான  ஷூமேக்கர்லெவி 9   என்பது 1993 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது.  பல ஆண்டுகளுக்கு முன்பே அது  வியாழன் கோளின் ஈர்ப்பு விசையால் ஆட்கொள்ளப்பட்டதால்  சூரியனைச்சுற்றுவதற்குப் பதிலாக  வியாழனைச் சுற்றத்துவங்கி இருக்கலாம் என்பது,  பல உற்றுநோக்கல் ஆய்வுகளால் தெளிவானது. வியாழனின் வளிமண்டலத்திற்கு மேல் சுமார் 1000 கி.மீ உயரத்தில் இந்த வால்மீன், இக்கோளின் விசையால் 1992ல்  பல துண்டுகளாக உடைக்கப்பட்டிருந்தது  என வானவியல் ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டனர. தொடர்ந்து நடந்த கணக்கீடுகள், இந்த வால்மீன் 1994ம் ஆண்டு ஜூலை மாதத்தில்  வியாழன் மீது அதிவேகமாக மோதியதைக் காட்டின..................

மேலும் அறிந்து கொள்ள