பூமியின்மேலுள்ள புகழ்வாய்ந்த மோதல்வகை பள்ளங்கள் - Poster 14

விளக்கப்படம் 14 - பூமியின்மேலுள்ள புகழ்வாய்ந்த மோதல்வகை பள்ளங்கள்  


பள்ளங்களைக் குத்துத தழும்புகளாகக் கொண்டுள்ள,  நிலாவின் பரப்பினைப் பார்க்கும்  ஒரு பார்வையே,  பல ஆண்டுகளாக அது எரிகற்கள் மூலம் தாக்கப்பட்டு வந்திருப்பதை கூறிவிடுகிறது. பாறையை உருக்கித் தள்ளிப் பள்ளங்களை உண்டாக்கப் போதுமான வலிமை பெற்றவை இந்த மோதல்கள்.  சிறிய எரிகற்கள் பூமியின்மீது விழும்போது நம் வளிமண்டலத்தில் அவை எரிந்துவிட்டாலும், நம் பூமி இத்தகைய தாக்குதல்களிலிருந்து  முழுவதுமாக தப்பிக்க முடியவில்லை.
        நவீனகாலத்தின், அறியப்பட்ட மிகப் பெரிய மோதல்வகைப் பள்ளம்;  சௌதி அரேபியாவில், தோராயமாக, செப்டம்பர் 1704ல் உருவான 116 மீட்டரை அகலமுற்ற வாபர் பள்ளமே சமீபத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளமாகும்.
        சிக்ஸ்யுலப் பள்ளம்  (டைனோசர் அழிவுப் பள்ளம்) ; மெக்சிகோ நாட்டின் யுகாடான் தீபகற்பத்தில் புதைந்துள்ள 180 கி.மீ க்கும் கூடுதலான அகலமுள்ள, புகழ்வாய்ந்த சிக்ஸ்யுலப் பள்ளமானது தோராயமாக, 650 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 10கி.மீ அளவுள்ள வால்மீன் அல்லது விண்கல்லால் உண்டாக்கப்பட்ட ஒன்றாகும். இந்த மோதல் நிகழ்வுதான் பூமியின் மிகப் பெரிய காலநிலை மாறுபாட்டிற்குக் காரணமாகி (பசுமைக்குடில் விளைவு போன்றவற்றால்)  டைனோசர்களின் இன அழிவை ஏற்படுத்தியதாக நம்ப்படுகிறது.
       புகழ்வாய்ந்த மற்றபிற  பள்ளங்கள்;    

 லோனார் பள்ளம்,  இந்தியா ;     மகாராஷ்டிரம் மாநிலம் புல்தானா மாவட்டத்தில் இந்த மோதல்வகைப் பள்ளம் அமைந்துள்ளது.  1.8 கி.மீ விட்டமும்,  சுமார் 140 மீட்டர் ஆழமும் கொண்ட, பேசால்ட் வகைப் பாறையின்  மோதல் வடிவமைப்பாக உள்ள இதுவே, இந்த வகையின் மிகப் பேரியதானதாகும். இந்தப் பள்ளத்தின் வயது 52000 ஆண்டுகள் என மதிப்படப்பட்டுள்ளது.......

மேலும் அறிந்து கொள்ள...

Download : ISON ஐசான் Tamil-Poster14_ImpactCraters.jpg (3.7MB)