எரிகற்களின் மழை – வால்நட்சத்திர சிதைவுகளின் ஊடே செல்லுதல் -Poster 15

விளக்கப்படம் 15 எரிகற்களின் மழை – வால்நட்சத்திர சிதைவுகளின் ஊடே செல்லுதல்

எரி நட்சத்திரங்கள் உண்மையில் நட்சத்திரங்களே அல்ல – அவை பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்ட, நம் சூரியமண்டலத்தில் உள்ள சிறு கூழாங் கற்களே. ,வை நம் வளிமண்டலத்தில் நுழையும்போது உராய்வின் காரணமாக எரிவதால் நமக்கு அவை எரி நட்சத்திரம் போல சில வினாடிகள் தெரிகிறது. அதன் எரியாத பகுதி ஏதேனும் ,ருந்தால் அவையே நமக்கு எரி கற்களாகக் கிடைக்கின்றன. எனினும் வருடத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் மிக அதிக எண்ணிக்கையில் ஒரு மணி நேரத்தில் 10 லிருந்து 100வரை காணமுடியும்.

இவ்விண்கற்கள் அனைத்தும் வானில் ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து குறிப்பிட்ட பாதையில் வருவதாகத் தெரியும். இப்போது நமக்கு இந்த எரிநட்சத்திர மழை பூமி, வால் நட்சத்திரங்களின் சுற்றுப்பாதையின் ஊடே செல்வதால் ஏற்படுகிறது என்று தெரியும். வால் நட்சத்திரத்தில் இருக்கும் வாயுக்கள் அதன் வாலாக வெளிவரும்போது அத்தோடு கூடவே தூசுகளும் சிறு கூலாங்கற்களும் வெளிவரும். பின்னர் இவை சூரியனைச் சுற்றி வால் நட்சத்திரத்தின் சுற்று வட்டப்பாதையிலே வலம் வரும். காலம் செல்லச் செல்ல அந்த பாதையில் இவை பரவிவிடும். பூமி இந்த வால் நட்சத்திரத்தின் சுற்று பாதையை கடக்கும் போது இந்த உதிரிகள் புவியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு புவியின் வளிமண்டலத்தில் நுழைகிறது.........

மேலும் அறிந்து கொள்ள...

Download :  ISON ஐசான் Tamil-Poster15_MeteorShowers.jpg  (3MB)