வால்நட்சத்திரத் தேடலின் வரலாறு....Poster 16

விளக்கப்படம் 16 - வால்நட்சத்திரத்  தேடலின் வரலாறு.

வானில்...திடீரென 'வால்' நீட்டும்...வால்நட்சத்திரங்கள்...பல நூற்றாண்டுகளாக, அவைபற்றி ஒன்றுமறியாத அப்பாவி மக்களுக்கு...அச்சுறுத்தலாகவே அமைந்தன!
சீனர்களும், பாபிலோனியர்களும்...2000 ஆண்டுகட்குமுன்பே...ஹாலி வால்நட்சத்திரம் குறித்து, பதிவு செய்துள்ளனர்.மேலும், 'வராஹமிஹிரர்',  'பல்லாலசேனர்' ஆகியோரின் படைப்புகளிலும், முகலாயர் காலக் குறிப்புகளிலும், ஏராளமான வால்நட்சத்திரங்கள்பற்றி...எழுதப்பட்டுள்ளன.

பல வால்நட்சத்திரங்கள்... ஹாலியின் காலத்திலிருந்து....தொலைநோக்கியின்மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன..! அவற்றுள் சில...  தற்செயலாகக்  கண்டுபிடிக்கப்பட்டவையென்றாலும், பெரும்பாலானவை..., வானவியலாளர்களின்...அசாத்திய பொறுமையாலும், அர்ப்பணிப்புடன்கூடிய‌ தேடலாலும் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன... உதாரணமாக.......,தம் விடாமுயற்சியால்... 8 வால்நட்சத்திரங்களைக் கண்டறிந்த, முதல் தொழில்முறை பெண் வானவியலாளர்...இங்கிலாந்தின், கரோலின் ஹெர்ஷல் (1750-1848) (Caroline Herschel) அவர்களைக் குறிப்பிடலாம். ஃப்ரெஞ்ச்சு நாட்டின்... (Charles Messier) சார்லஸ் மெஸ்ஸியர் (1730-1817), 13 வால்நட்சத்திரங்களைக் கண்டுபிடித்துள்ளார். ஆயினும், (Jean-Louis Pons) ழான்-லூயிஸ் பான்ஸ் ( 1761-1831 ), 37 வால்நட்சத்திரங்களைக் கண்டுபிடித்து சாதனை படைத்திருக்கிறார். .......

மேலும் அறிந்து கொள்ள

Download: ISON ஐசான் Tamil-Poster16.jpg  (  3.3MB)